Puyal Thaandiye Vidiyal
Pudhu Vaanil Vidiyal
Boobaalame Vaa
Thamizhe Vaa
Dharaniyaalla
Thamizhe Vaa
|
புயல் தாண்டியே விடியல்
புதுவானில் விடியல்
பூபாளமே வா
தமிழே வா வா
தரணியாளத்
தமிழே வா
|
Vizhinthom Munam Naam
Yezhunthom Eppothum
Pirinthom Munam Naam
Innainthom Eppothum
|
விழுந்தோம் முன்னம் நாம்
எழுந்தோம் எப்போதும்
பிரிந்தோம் முன்னம் நாம்
இணைந்தோம் எப்போதும்
|
Dhisaiyettum Thamizhe ettum
Thitti thom Murasum Kottum
Madhi Nutpam Vaanai Muttum
Mazhai Muththai Kadalil Sottum (2)
|
திசையெட்டும் தமிழே எட்டும்
தித்தித்தோம் முரசம் கொட்டும்
மதிநுட்பம் வானை முட்டும்
மழை முத்தாய்க் கடலில் சொட்டும்
|
Agam Endral Anbai Konjum
Puram Endral Porai Pongum
Thadaiyindri Kaatril Engum
Thamizhendru Sange Muzhangum
Thadaiyindri Kaatril Engum
Thamizhendru Sange Muzhangum
|
அகம் என்றால் அன்பாய்க் கொஞ்சும்
புறம் என்றால் போராய்ப் பொங்கும்
தடையின்றிக் காற்றில் எங்கும்
தமிழென்று சங்கே முழங்கும்
தடையின்றிக் காற்றில் எங்கும்
தமிழென்று சங்கே முழங்கும்
|
Urangatha Pillaikellam
Thaalattai Thamizhe Karaiyum
Pasiyendru Yaarum Vandhal
Paagaagi Amutham Pozhiyum
|
உறங்காத பிள்ளைக்கெல்லாம்
தாலாட்டாய்த் தமிழே கரையும்
பசியென்று யாரும் வந்தால்
பாகாகி அமுதம் பொழியும்
|
Kodaivallal Ezhuvar Vandhaar
Kodai Endraal Uyirum Thandhaar
Padaikondu Pagaivar Vandhaal
Pala Paadam Katru Sendraar
|
கொடைவள்ளல் எழுவர் வந்தார்
கொடை என்றால் உயிரும் தந்தார்
படைகொண்டு பகைவர் வந்தால்
பலபாடம் கற்றுச் சென்றார்
|
Moovendar Sabaiyil Nindru
Muthamizhin Pulavar Vendraar
Paavendhar Endre Kandaal
Paaralam Manar Panninthaar
|
மூவேந்தர் சபையில் நின்று
முத்தமிழின் புலவர் வென்றார்
பாவேந்தர் என்றே கண்டால்
பாராளும் மன்னர் பணிந்தார்
|
Annaikkum Annai Neeye
Adivaanil Udhayam Neeye
Munnaikkum Munnai Neeye
Moopilla Thamizhe Thaaye (2)
Moopilla Thamizhe Thaaye ……..
|
அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லாத் தமிழே தாயே
|
Udhirnthom Munam Naam
Malarnthom Eppothum
Kidanthom Munam Naam
Kilaithom Eppothum
|
உதிர்ந்தோம் முன்னம் நாம்
மலர்ந்தோம் எப்போதும்
கிடந்தோம் முன்னம் நாம்
கிளைத்தோம் எப்போதும்
|
Thanninthom Munam Naam
Erinthom Eppothum
Tholainthom Munam Naam
Pinnaithom Eppothum
Vizhunthom Munam Naam
Ezhunthom Eppothum
|
தணிந்தோம் முன்னம் நாம்
எரிந்தோம் எப்போதும்
தொலைந்தோம் முன்னம் நாம்
பிணைந்தோம் எப்போதும்
விழுந்தோம் முன்னம் நாம்
எழுந்தோம் எப்போதும்
|
Annaikkum Annai Neeye
Adivaanil Udhayam Neeye
Munnaikkum Munnai Neeye
Moopilla Thamizhe Thaaye
|
அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லாத் தமிழே தாயே
|
Thamizhendral Moovagai Endre
Aandaandai Arinthom Andru
Iyal Nadagam Isaiyum Sernthal
Manam Kollai Kollum Endru
|
தமிழென்றால் மூவகை என்றே
ஆண்டாண்டாய் அறிந்தோம் அன்று
இயல் நாடகம் இசையும் சேர்ந்தால்
மனம் கொள்ளை கொள்ளும் என்று
|
Kaalangal Pogum Bodhu
Mozhi Sernthu Munnaal Ponaal
Azhivindri Thodarum Endrum
Amudhaagi Pozhiyum Engum
|
காலங்கள் போகும்போது
மொழி சேர்ந்து
முன்னால் போனால்
அழிவின்றித் தொடரும் என்றும்
அமுதாகிப் பொழியும் எங்கும்
|
Vinyaana Thamizhaai Ondru
Vanigathin Thamizhaai Ondru
Innaiyathin Noolai Kondu
Innaiyum Thamizh Ulaga Pandhu
|
விஞ்ஞானத் தமிழாய் ஒன்று
வணிகத்தின் தமிழாய் ஒன்று
இணையத்தின் நூலைக் கொண்டு
இணையும் தமிழ் உலகப் பந்து
|
Mai Achchil Munne Vandhom
Tattachil Thaniye Nindrom
Kanninikkul Porunthi Konndom
Kalaiketra Maari Kolvom
|
மைஅச்சில் முன்னே வந்தோம்
தட்டச்சில் தனியே நின்றோம்
கணினிக்குள் பொருந்திக் கொண்டோம்
கலைக்கேற்ப மாறிக் கொள்வோம்
|
Unipaai Kavanam Kondom
Ullvaangi Maari Selvom
Pin Vaangum Peche Ilai
Munnokki Sendre Velvom
|
உன்னிப்பாய்க் கவனம் கொண்டோம்
உள்வாங்கி மாறிச் செல்வோம்
பின்வாங்கும் பேச்சே இல்லை
முன்னோக்கிச் சென்றே வெல்வோம்
|
Pudhu Nutpam Nenje Ethuvum
Kaal Vaikkum Munne Thamizhum
Ayudham Kollum Azhagaai
Aadaigal Aniyum Pudhithaai
|
புதுநுட்பம் என்றே எதுவும்
கால் வைக்கும் முன்னே தமிழும்
ஆயத்தம் கொள்ளும் அழகாய்
ஆடைகள் அணியும் புதிதாய் !
|
Engeyum Sodai Poga
En Arumai Thamizhe Vaa Vaa
Varungaala Pillaigal Vaazhvil
Valam Ponga Vaa Vaa Vaa Vaa
|
எங்கேயும் சோடை போகா
என்னருமைத் தமிழே வா வா
வருங்காலப் பிள்ளைகள் வாழ்வில்
வளம் பொங்க வாவா வாவா
|
Annaikkum Annai Neeye
Adivaanil Udhayam Neeye
Munnaikkum Munnai Neeye
Moopilla Thamizhe Thaaye
|
அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லாயத் தமிழே தாயே
|
Pazhangaala Perumai Pesi
Padithaandaa Vannam Poosi
Sirai Vaikka Paarpaar Thamizhe
Nee Seeri Vaa Vaa Velliye
|
பழங்காலப் பெருமை பேசி
படிதாண்டா வண்ணம் பூசி
சிறை வைக்கப் பார்ப்பார் தமிழே
நீ சீறி வாவா வெளியே
|
Vai Solil Veerar Elaam
Vadikatta Paduvaar Veettil
Solukkull Siranthathu Endraal
Seyal Endre Sol Sol Sol Sol
|
வாய்ச்சொல்லில் வீரர் எல்லாம்
வடிகட்டப் படுவார் வீட்டில்
சொல்லுக்குள் சிறந்தது என்றால்
செயல் என்றே சொல்சொல் சொல்சொல்
|
Sendriduvom Ettu thikkum
Ayal Naatu Palgallai Pakkam
Iru Kaikkal Thamizhukku Amaippom
OorKkoodi Therai Izhuppom
|
சென்றிடுவோம் எட்டுத் திக்கும்
அயல்நாட்டுப் பல்கலைப் பக்கம்
இருக்கைகள் தமிழுக்கமைப்போம்
ஊர்கூடித் தேரை இழுப்போம்
|
Mozhiyilai Endral Inge
Idamilai Endre Arivaai
Vizhithukol Thamizhaa Munne
Pinnainthukol Thamizhaal Unnai
|
மொழியில்லை என்றால் இங்கே…
இனமில்லை என்றே அறிவாய்
விழித்துக்கொள் தமிழா முன்னே
பிணைத்துக் கொள் தமிழால் உன்னை
|
Thamizhengal Uyire Endru
Dhinathorum Solvom Nindru
Unaiyendri Yaarai Kondu
Uyarvoma Ulagil Indru
|
தமிழெங்கள் உயிரே என்று
தினந்தோறும் சொல்வோம் நின்று
உனையன்றி யாரைக் கொண்டு
உயர்வோமோ உலகில் இன்று
|
Annaikkum Annai Neeye
Adivaanil Udhayam Neeye
Munnaikkum Munnai Neeye
Moopilla Thamizhe Thaaye (2)
Puyal Thandiye Vidiyal
Pudhu Vaanil Vidiyal
Poobalame Vaa
Thamizhe Vaa
Dharaniyana Thamizhe Vaa
Thamizhe Vaa
Dharaniyana Thamizhe Vaa.
|
அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லாத் தமிழே தாயே
புயல் தாண்டியே விடியல்!
புதுவானில் விடியல்
பூபாளமே வா
தமிழே வா வா
தரணியாளத் தமிழே வா
தமிழே வா வா
தரணியாளத் தமிழே வா
|